கிருஷ்ணகிரி

குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ.3 கோடி கால்நடைகள் விற்பனை

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி, குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.3 கோடியில் ஆடு, மாடு, கோழிகள் விற்பனையாயின.
ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி வாரச் சந்தையானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கூடுவது வழக்கம். அதன்படி, ஜன.12-ஆம் தேதி கூடிய இந்த சந்தையில், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், வியாபாரிகள் வருகை புரிந்தனர். 
இந்தச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. இதில், சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

SCROLL FOR NEXT