கிருஷ்ணகிரி

மக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

கிருஷ்ணகிரியில்  திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வழங்கினார் .
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்,  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 247 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், மனுக்களைப் பரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு உரிய பலன் அடையும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, பார்வையற்ற பயனாளிக்கு டிஜிட்டல் மடக்குக் குச்சி, வருவாய்த் துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவை ஆட்சியர் வழங்கினார்.
அப்போது, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனித் துணை ஆட்சியர் சந்தியா, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT