பார் கவுன்சில் தேர்தல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 97 சதவீத வாக்குகள் பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 97 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது. பலத்த போலீஸார் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தத் தேர்தலில், வாழக்குரைஞர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
கிருஷ்ணகிரியில் 265 வாக்குகளும், ஒசூரில் 159, பேச்சம்பள்ளியில் 13, தேன்கனிக்கோட்டையில் 14, ஊத்தங்கரையில் 40 என மொத்தம் 507 வாக்காளர்களில் 491 பேர் வாக்களித்தனர்.