பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளநிலைக் கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பட்டம் பயின்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வித் துறை மூலமாக ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ள இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தங்கள் விண்ணப்பத்தை மே 25-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் - 23, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனைத்துப் பார்வையற்ற ஆசிரியர்களும், விண்ணப்பித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.