கிருஷ்ணகிரி

முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி பேரனுடன் முதியவர் தீக்குளிக்க முயற்சி

DIN

போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரனுடன் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அருகேயுள்ள ஆமணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன்(85). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிழைப்பு நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரியும் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இவரது மனுவின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மனமுடைந்த சாமிநாதன் திங்கள்கிழமை தனது பேரன் தட்சிணாமூர்த்தியை (6) அழைத்துக்கொண்டு போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீதும், பேரன் மீதும் ஊற்றினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸார், முதியவர் சாமிநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT