முகப்பு
கிருஷ்ணகிரி

மது விற்றதாக 8 பேர் கைது

ஊத்தங்கரையில் டாஸ்மாக் மதுவை பதுக்கிவைத்து விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:30 AM
பகிர்:

ஊத்தங்கரையில் டாஸ்மாக் மதுவை பதுக்கிவைத்து விற்றதாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டில் மதுக்களை பதுக்கிவைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸார் நடத்திய சோதனையில் கல்லூரைச் சேர்ந்த முருகேசன் (45), லக்கம்பட்டியைச் சேர்ந்த தீர்த்தா (45), கல்லாவி அம்மன்கோவில்பதி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் (44),  சிவாஜி(51), சிங்காரப்பேட்டையை அடுத்த கொட்டுக்காரம்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(39), பாவக்கல் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த பூவன்(51), இலவம்பாடி வேலன் நகரை சேர்ந்த குமார்(39), சாமல்பட்டி காஞ்சாம்பதியைச் சேர்ந்த ரத்தினம் (43) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 69 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.