பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு ‘மகாரத்னா’பொதுத்துறை நிறுவனமும், உலகின் மிகப்பெரிய மின்பரிமாற்றப் பயன்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் மாநிலங்களுக்கு இடையேயான மின்பரிமாற்ற அமைப்பைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வையிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல், அத்துடன் தேசிய மற்றும் பிராந்திய மின்கட்டமைப்புகளை இயக்குதல் ஆகிய பொறுப்புகளுடன் மின்பரிமாற்றத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் தற்போது, டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து மே 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Advertisement
Advertisement
பணி: Diploma Trainee (Electrical) (DTE)
பணி: Diploma Trainee (Civil) (DTC)
பணி: Diploma Trainee (Survey) (DTS)
பணி: Junior Officer Trainee (HR) JOT (HR)
பணி: Junior Officer Trainee (F&A) JOT (F&A)
பணி: Junior Technician Trainee (Survey) JTT(Survey)
மொத்த காலியிடங்கள்: 660
தகுதி: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறையில் ஐடிஐ, டிப்ளமோ, பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., சி.ஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: மாதம் ரூ. 21,500 - 74,000 வழங்கப்படும்.
வயது வரம்பு: 11.5.2026 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 வயது வரை தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வயதுவரை தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கணினித் தேர்வு, கணினி திறன் தேர்வு, டிரேட் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டிற்கு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: Survey பணிக்கு ரூ.200. இதர பணிகளுக்கு ரூ.300. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.5.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
POWERGRID seeks applications from Capable, Committed, Energetic and Resilient Graduates, Diploma and ITI holders to join its fold as Diploma Trainee (Electrical) – DTE, Diploma Trainee (Civil) - DTC,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.