கிருஷ்ணகிரி

தென்பெண்ணையாற்றில் சுழலில் சிக்கிய கல்லூரி மாணவர் மீட்பு

DIN

மஞ்சமேடு தென்பெண்ணையாற்றில் விநாயகர் சிலையை கரைக்க வந்தபோது நீர் சுழலில் சிக்கிய கல்லூரி மாணவரை மீட்டு  மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 
போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மஞ்சமேடு - இருமத்தூர் இடையே  பழமையான பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே ஆழமான பள்ளம் உள்ளது. இந்தப் பகுதியில் மேலிருந்து குதித்து விளையாடும் இளைஞர்கள் அடிக்கடி பாறை இடுக்குகளிலும், பள்ளத்திலும் சிக்கி
உயிரிழந்து விடுகின்றனர். 
இந்த நிலையில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த பாய்ச்சல் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் திருமலை தனது கிராமத்தில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையைக் கரைக்க மஞ்சமேடு தென்பெண்ணையாற்றுக்கு நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழணை வந்துள்ளார். அப்போது திருமலை நீர் சுழலில் சிக்கினார். அவரை நண்பர்கள் தண்ணீரில் மூழ்கி தேடினர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு திருமலையை போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு
அனுமதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT