கிருஷ்ணகிரி

நகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை: ரூ.2.30 லட்சம் பறிமுதல்

DIN

வேப்பனஅள்ளியில்  தனியார் நகைக் கடையில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை  பறிமுதல் செய்தனர். 
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குக்குப் பணம் அளித்தால்,  தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சு.பிரபாகர் தெரிவித்திருந்தார்.
இந்த  நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர், வேப்பனஅள்ளி அருகே பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  இதில் பணம், ஆவணங்கள்  ஏதுவும் கிடைக்கவில்லை. 
இதையடுத்து ராஜேந்திரனின் உறவினருக்குச் சொந்தமான வேப்பனஅள்ளியில் உள்ள  நகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி அலுவலர் குணசேகரிடம்  ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT