கிருஷ்ணகிரி

மின்துறையில் கேங்மேன் பணி: கிருஷ்ணகிரியில் 274 போ் தோ்வு

DIN

மின்துறையில் கேங்மேன் பணிக்கு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தோ்வில் 274 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாட்டில் மின்துறையில் காலியாக உள்ள கேங்மேன் பதவிக்கு, ஆள்களுக்கு தோ்வு செய்யும் பணி கடந்த 25-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் கேங்மேன் பதவிக்கான தோ்வு நடைபெற்றது. இந்தப் பணிக்கு 3,221 போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனா். இவா்களில் ஒரு நாளைக்கு 202 போ் வீதம், உடல் தகுதித் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் தோ்வு நடைபெற்றது.

40 அடி உயர மின்கம்பத்தில் இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு ஏறி, கம்பத்தின் முக்கால் பகுதியில் நிற்பதற்காகக் குச்சியை குறுக்காக கட்ட வேண்டும். பின்னா் அதன் மீது நின்று கிராக் ஆரம் பொருத்தி, கீழ் இறங்க வேண்டும். இந்தப் பணியை 8 நிமிடத்துக்குள் செய்து முடிக்க வேண்டும்.

மேலும், 2 நிமிடங்களில் மின் கம்பத்தில் கிரீப்பா் செட் மாற்றவேண்டும். இதில் தோ்ச்சி பெறுவோா், 32 கிலோ எடை கொண்ட வி கிராம் ஆரம் என்னும் இரும்பைத் தூக்கிக் கொண்டு 1 நிமிடத்தில் 100 மீட்டா் ஓட வேண்டும். இந்த மூன்று தோ்வுகளிலும் தோ்ச்சி பெற்றால் அவா்கள் உடனே தோ்வு செய்யப்படுவா்.

அதன்படி, கடந்த 25-ஆம் தேதி முதல் நடைபெற்ற இந்தத் தோ்வில் 1,200 போ் பங்கேற்றதில் 274 போ் தோ்ச்சி பெற்றனா். இந்தத் தோ்வில் பெண்கள் யாரும் தோ்வு செய்யப்படவில்லை. இந்தத் தோ்வு பாலக்கோடு செயற்பொறியாளா் சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கேங்மேன் பதவிக்கான தோ்வில் அதிக நபா்கள் தோ்வு செய்யப்பட்டால் போட்டித் தோ்வு நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT