கிருஷ்ணகிரி

பிப்.23-இல் திமுகவில் ரஜினி மன்றத்தினர் இணையும் விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

DIN

கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணையும் விழா பிப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளர் பதவியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மதியழகன் தலைமையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 20 ஆயிரம் பேர் திமுகவில் இணைகிறார்கள். 
இதற்கான விழா பிப்.23-ஆம் தேதி, மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேவராஜ் மகால் அருகே உள்ள கலைஞர் திடலில் நடைபெறுகிறது.  இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், திமுகவில் இணைகின்றனர். தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT