கிருஷ்ணகிரி

ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயிலில் பால்கம்பம் நடும் விழா

DIN

ஒசூர் அருள்மிகு மரகதாம்பிகை  சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம் மார்ச் 20-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பால்கம்பம் நடப்பட்டது.
மலை அடிவாரத்தில் தேர்பேட்டை நான்கு மாட வீதியில் உள்ள பெரிய தேரின் ஈசான்ய மூலையில் பால்கம்பம் நடப்பட்டு தேரோட்ட நிகழ்வுகள் தொடக்கிவைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு விழா நிகழ்வுகள் நடைபெறும். மார்ச் 14 -ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை நாள்தோறும் உற்வசமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். 
மார்ச் 19-ஆம் தேதி மரகதாம்பிகை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் திருக்கல்யாண உத்ஸவம், மார்ச் 20 ஆம் தேதி தேரோட்டம், 21-ஆம் தேதி தெப்ப உத்ஸவம் நடைபெறுகிறது. முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஏ.மனோகரன், கே.கோபிநாத், பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் எம்.நாகராஜ், பாஜக மாவட்ட செயலாளர் ராஜீ, ராமு சக்திவேல், சூடப்பா, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ராமாஞ்சிரெட்டி, பால்முனியப்பா,  கோயில் அர்ச்சகர் வாத்தீஸ்வரன், கோயில் தனி அலுவலர் ராஜரத்தனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT