கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

DIN

ஊத்தங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சோனா யுக்தி  மற்றும் ஹைர்மி சார்பில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், 30-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் 8-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் பங்கேற்க உள்ளன.
மேலும், இம் முகாமில் பங்கேற்க 2016, 2017 மற்றும் 2018-இல் இளநிலை, முதுநிலை, பி.இ, டிப்ளமோ முடித்த மாணவ-மாணவியர், 2019-இல் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும், w‌w‌w.‌s‌v‌m​c‌u‌g‌i.​c‌o‌m என்ற இணையதளத்திலும் பதிவுசெய்யலாம். இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பங்கேற்று பயன்பெறலாம். முன்னதாக கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர், செயலர் ஆகியோர் இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT