முகப்பு
கிருஷ்ணகிரி

கொள்ளையர்களிடம் இருந்து மீட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறை

கொள்ளையர்களிடம் இருந்து மீட்ட நகையை அதன் உரிமையாளரிடம் ஊத்தங்கரை போலீஸார் ஒப்படைத்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 2:33 am IST
பகிர்:

கொள்ளையர்களிடம் இருந்து மீட்ட நகையை அதன் உரிமையாளரிடம் ஊத்தங்கரை போலீஸார் ஒப்படைத்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த சின்னப்பனேரி தோட்டம் பகுதியில் வசிப்பவர் திருவேங்கடம் (42) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இவருடன் தந்தை கிருஷ்ணன் (68), தாயார் பிருந்தாவனம் (60) மனைவி சூரியகலா (27), குழந்தைகள் ஸ்ரீஹரி (7), அனன்யா (5) தங்கை மகள் சிவானி (15), மகன் தனஞ்செயன் (11) ஆகியோர் உள்ளனர். கடந்த 2017, ஆகஸ்ட் 30 -ஆம் தேதி இரவு சூரியகலா தன்னுடைய மகனுடன் கதவைத் திறந்து வெளியே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் சூரியகலாவை சுற்றி வளைத்தது. அந்தக் கும்பல் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
பின்னர்,  நான்கு பீரோக்களில் இருந்த தங்க நகைகள் 24 பவுன், ரொக்கம் ரூ. 1.15 லட்சம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்
இதில் சம்மந்தப்பட்ட 3 பேரை 2017 இல் கைது செய்த போலீஸார்  அவர்களிடம்  இருந்து பறிமுதல் செய்த 56.6 கிராம் பவுன் நகையை மீட்ட போலீஸார் செவ்வாய்க்கிழமை (ஜன.22) ஊத்தங்கரை டி.எஸ்.பி ராஜபாண்டி  தலைமையில் காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி,உதவி காவல் ஆய்வாளர் கனிமொழி ஆகியோர் முன்னிலையில் அதன் உரிமையாளர் கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.  இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.