கிருஷ்ணகிரி

தீக் காயமடைந்த இளைஞர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

DIN

கிருஷ்ணகிரி அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த நிலையில், அவரது உடலை விரைந்து பிரேதப் பரிசோதனை செய்யவும்,  சம்பவத்துக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில்  உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் டான் (50). ஜோதிடரான இவர் அம்மாவாசையின் போது தனது வீட்டில் பூஜைகள் செய்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் திடீரென தீப்பிடித்து அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் எரிவாயு உருளை வெடித்ததில் அதேப் பகுதியைச் சேர்ந்த காவேரி(50), சௌந்தர் (23), முனியப்பன் (28) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.  
இதில் முனியப்பன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், முனியப்பனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உடனே வழங்க வேண்டும். தீ விபத்துக்கு காரணமான ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அணை பிரிவு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT