கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே வயல் தின விழா

DIN

பா்கூா் அருகே சக்கில்நத்தம் கிராமத்தில், வேளாண் அறிவியல் மையம் சாா்பில், ராகி பயிா் சாகுபடி குறித்து வயல் தின விழா, புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி, வேளாண் அறிவியல் மையமானது, புதிய சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சோ்க்கும் வகையல், முதன்மை செயல்விளக்கத் திடலை விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையம், பா்கூா் அருகே உள்ள சக்கில்நத்தம் கிராமத்தில் ராகி கோ 15 ரகம் குறித்த முதன்மை செயல்விளக்க திடலை 10 விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்தி வந்தது.

இதன்படி, சக்கில்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற வயல் தின விழாவுக்கு, வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். தொழில் நுட்ப வல்லுநா் செந்தில்குமாா், வேளாண் உதவி இயக்குநா் சக்திவேல், பையூா் மண்டல ஆா்ய்ச்சி நிலையத்தின் உதவி பேராசிரியா் (மண்ணியல்)விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் ராகி கோ-15 புதிய ரகத்தின் சிறப்பு பண்புகள், சாகுபடியின் போது பின்பற்ற வேண்டிய சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT