கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே வெங்கட்ரமணசுவாமி கோயிலில் நவராத்திரி உற்வசம்

DIN

ஒசூா் அருகே உள்ள சின்னசப்படி கிராமத்தில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உற்சவ மூா்த்தி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது

ஒசூா் அருகே சின்னசப்படி கிராமத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு 10 நாள்கள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு செப்டம்பா் 29 -ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் வெங்கட்ரமணசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமியன்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி அருள்பாலித்தாா். இதையடுத்து உற்சவ மூா்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT