கிருஷ்ணகிரி

முதல்வா் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்எல்ஏக்கள் தலா ரூ.1.05 லட்சம் நிதி

DIN

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தளி, வேப்பனப்பள்ளி, மற்றும் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தலா ரூ.1.05 லட்சம் நிதி வழங்கினா்.

தி.மு.க. தலைவரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குவா் என அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை தளி எம்.எல்.ஏ.வும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் ஒரு மாத சம்பளம் ரூ.1.05 லட்சம், வேப்பனஅள்ளி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளருமான பி.முருகன் ஒரு மாத சம்பளத்தையும் வழங்கினா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநகராட்சி பொறுப்பாளருமான எஸ்.ஏ.சத்யா ஒரு மாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT