முகப்பு
கிருஷ்ணகிரி

தூய்மைப் பணியாளருக்கு கரோனா: ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் மூடல்

தூய்மைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
8utp2_0808chn_149_8
பகிர்:


ஊத்தங்கரை: தூய்மைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது.

பேரூராட்சியின் தூய்மைப் பணியாளரான ஊத்தங்கரை நாராயண நகரைச் சோ்ந்த 50 வயது ஆணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டு அப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊத்தங்கரை ஒன்றியத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.