கிருஷ்ணகிரியில் விநாயகர் பூஜைக்கு பொருள்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்
கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் கோயிலுக்கு பூஜை பொருட்களை இஸ்லாமியர்கள் அளித்தனர்.
கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் கோயிலுக்கு பூஜை பொருட்களை இஸ்லாமியர்கள் அளித்தனர்.
கிருஷ்ணகிரி அரசு குடியிருப்பு-1, எல்ஐசி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
சுவாமியை வழிபாடு செய்ய வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய நிலையில் இஸ்லாம் சமூகத்தை சார்ந்த கிருஷ்ணகிரி நகரமன்ற முன்னாள் உறுப்பினர் அஸ்லாம் தலைமையில் இஸ்லாமியர்கள் பூஜை பொருட்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் பெயரில் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் இத்தகைய நிகழ்வை மேற்கொண்டு வருகின்றனர்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.