முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு

பல எக்சைஸ் வரிகள் குறைப்பு பற்றி...

Updated On : 15 மார்ச், 2026 at 10:34 PM
16.3.1976
பகிர்:

புதுடில்லி, மார்ச். 15 - நிதி மந்திரி சி. சுப்ரமணியம் இன்று லோக்சபையில் தாக்கல் செய்த 1976-77 மத்ய பட்ஜெட்டில் சோப்பு, ரெடிமேட் துணி, க்ஷவர பிளேடுகள் முதலிய பல பொருட்களுக்கு எக்சைஸ் தீர்வையைக் குறைத்தார். வருமான வரி விகிதங்கள் வெட்டப்பட்டு அதிகபட்ச அளவு 60 சதவிகிதத்துக்கு குறைக்கப்பட்டது. செல்வ வரி விகிதங்களும் குறைக்கப்பட்டன.

ரூ. 80 கோடிக்கு புதிய வரிப் பிரேரணைகளை அவர் கொண்டு வந்தார். அதில் ரூ. 32 கோடி மாநிலங்களுக்கு செல்லும்.

புதிய பிரேரணைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு 1976-77 பட்ஜெட்டில் ரூ.320 கோடி துண்டு விழுகிறது.

கட்டாய டெபாசிட் திட்டமும் (ரூ.15,000 வருட வருமானத்துக்கு மேல் உள்ளவர்கள் செலுத்த வேண்டியது) கிராக்கிப்படி உயர்வில் பாதியை டெபாசிட் செய்யும் திட்டமும் ஓராண்டுக்கு நீடிக்கப்படுகிறது.

மறைமுக வரிகள்

பல நுகர்வோர் பொருட்கள் மீது எக்சைஸ் தீர்வை குறைகிறது.

ரெடிமேட் துணி: 10 சதவிகிதம் இருந்த தீர்வை ரத்து.

க்ஷவர எவர்சில்வர் பிளே டுகள் 10 சத விகிதத்திலிருந்து 1 சதவிகிதம்.

குடும்ப, லாண்டரி சோப்பு: 7 சதவிகிதத்திலிலிருந்து 5 சதவிகிதம்.

மலிவான வகை குளியல் சோப்பு: 12 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம்.

'டெடெர்ஜெண்ட் மற்றும் சலவை பொருட்கள் 15 சதவிகிதத்திலிருந்து 12.5 சதவிகிதம்.

உலோக மூடி கொண்ட டிரை பாட்டரிகள்: 25 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதம்.

சிறு அளவு டேபிள் பெடஸ்டல் விசிறி; 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம்.

நடுத்தர ரெப்ரிஜரேட்டர்; 100 லிட்டருக்கு மேல் 105 லிட்டருக்கு குறைவாக; 50 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம். ...

த.நா.தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் "பின்னடைவு" - மத்திய மந்திரி பேட்டி

சென்னை, மார்ச் 15 -1965-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டுக்கான காலத்தில் தமிழ்நாட்டில் ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் மாணவர்களைச் சேர்க்கும் எண்ணிக்கை குறைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ஹாஸன் நூருல் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

6 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட தொகுதியில் உள்ள குழந்தைகளை ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் சேர்ப்பதில் எண்ணிக்கைக் குறைந்திருப்பது மத்திய அரசுக்குப் பெரும் கவலை அளிப்பதாக அவர் கூறினார். கல்வி சம்பந்தமாக நடந்த மூன்றாவது ஆய்விலிருந்து இந்தப் பின்னடைவு பற்றி தெரியவந்ததாக ஹாஸன் கூறினார். அண்மையில் இந்த அறிக்கை மத்திய அரசுக்குக் கிடைத்தது.

இது மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்குமாதலால் இந்த நிலவரத்தை திருத்துவதே புதிய நிர்வாகத்தின் பணியாகும் என்றார். முன்புள்ள மாநில கவர்னரையும் அவருடைய ஆலோசகர்களையும் சந்தித்து, இது சம்பந்தமாக தம்முடைய கவலையைத் தெரிவித்துக் கொண்டதாகக் கூறினார்.

பிரஸ்தாப காலத்தில் கிராமப் பகுதிகளில் நடுத்தரப் பள்ளிக் கூடங்களைத் திறப்பதிலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். நடுத்தரப் பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் அகில இந்திய சராசரி 12.5 சதவிகிதம் என்றும், தமிழ் நாட்டில் 9 சதவிகிதம் குறைவு என்றும் ஹாசன் சொன்னார்.

தமிழ் நாட்டில் பள்ளிக்கூடமேயில்லாத 1500 கிராமங்கள் இருக்கின்றன என்பது கவலை தரும் மற்றொரு அம்சமாகும் என்றும், இதுவும் இந்த சர்வேயிலிருந்து தெரியவந்ததாகவும் கூறினார். இந்தக் கிராமங்கள் ஒவ்வொன்றும் இரண்டாயிரத்துக்கு மேல் மக்கள் தொகையுள்ள கிராமமாகும்.

ஐ. ஐ. டி. போன்ற தொழில் கல்லி நிலையங்களுக்கான பிரவேச பரீட்சைகள் போன்ற போட்டி பரீட்சைகளில் கலந்து கொள்வோர் தொகையும் சீராகக் குறைந்திருப்பதாகச் சொன்னார். ...

summary

16.3.1976: Reduction of several excise duties - tax cut on soap, readymade cloth, blades

முழு கட்டுரையைப் படிக்க →