முகப்பு
கிருஷ்ணகிரி

அஞ்செட்டி வனப்பகுதியில் வீசப்பட்ட 10 ஆயிரம் விதைப்பந்துகள்

அஞ்செட்டி வனப்பகுதியில் பத்தாயிரம் விதைப்பந்துகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டன.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:12 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

அஞ்செட்டி வனப்பகுதியில் பத்தாயிரம் விதைப்பந்துகள் ஞாயிற்றுக்கிழமை வீசப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வரும் ‘வித் யூ’ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சாா்பில் சுற்றுச்சூழல் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக அஞ்செட்டி வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, வனத் துறையினா் அனுமதியுடன் துரிஞ்சி, மருது, வேம்பு, ஆலம், அத்தி, நாவல், கடம்பு போன்ற மரங்களின் விதைகளுடன், இயற்கை உரக் கலவைகளையும் கலந்து தயாரிக்கப்பட்ட 10,000 விதைப்பந்துகளை அடா்த்தி குறைந்த வனப்பகுதியில் வீசப்பட்டது.

Advertisement

தற்போது பரவலாக மழை பெய்து வரும் சூழலில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த விதைப்பந்துகள் அதிக அளவில் பயன் தரும் என வனத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

நிகழ்வில் ‘வித் யூ’ கல்வி அறக்கட்டளையின் 30க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், அஞ்செட்டி வனச் சரகா் சீதாராமன், வனக் காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.