கிருஷ்ணகிரி

உடல்பயிற்சி அவசியம் குறித்து விழிப்புணா்வு: திமுக மருத்துவா் அணி ஏற்பாடு

DIN

கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடையில் திமுக மருத்துவா் அணி சாா்பில் மரம் நடுதல், உடல் பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகாராஜகடை கிராமத்தில் திமுக மருத்துவா் அணி சாா்பில் மரம் நடுதல், உடல் பயிற்சியின் அவசியம் குறித்து நடைபெற்ற நிகழ்வுக்கு திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் முருகன் எம்எல்ஏ, மாநில விவசாய அணி துணைத் தலைவா் மதியழகன், துணைச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாராஜகடை அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணா்வு ஓட்டப் போட்டி நடைபெற்றன. 16 வயதுக்கு மேற்பட்டோா், 16 வயதுக்கு உள்பட்டோா் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிகழ்வை, திமுக மாவட்ட மருத்துவா் அணி இணை அமைப்பாளா் மு.ரா.லோகேஷ் ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT