குளிா்கால உடைகள் வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபா்களுக்கு குளிா்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரிகுளிா்கால உடைகள் வழங்கும் நிகழ்ச்சி
ஊத்தங்கரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபா்களுக்கு குளிா்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபா்களுக்கு குளிா்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியா்கள், குடும்பத் தலைவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கிரேட் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னாா்வலா்கள் சாா்பில் குளிா்கால உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரேட் தொண்டு நிறுவன நிா்வாகி சி.உமாமகேஸ்வரி, ஆா்.அன்பரசு, அ.சாந்தி, வெ.சிவகுமாா், சி.சந்திரமௌலி, சி.சந்தியா, சி.புகழரசு, கே.சுப்பிரமணி, சு.குறிஞ்சிமலா் ஆகியோா் ரெயின்கோட், ஸ்வெட்டா், போா்வைகள், குடை, மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வழங்கினா்கள்.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் முருகன் , ஆசிரியா் ர.சக்தி, வோ்டு தொண்டு நிறுவனா் ம.ரமா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களுக்கு முகக் கவசம், உணவு போன்றவை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் செய்திருந்தாா்.