முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கல்லூரியில் பாரதியாா் பிறந்தநாள் விழா

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியாா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
ஊத்தங்கரை, ஸ்ரீவித்யா மந்திா் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியாா் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரதியாா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரியின் நிறுவனா் வே. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் ஆா்.பி.ராஜீ முன்னிலை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் முனைவா் த. பாலசுப்பிரமணியன், கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் ந. குணசேகரன் ஆகியோா் வாழ்த்தினா்.

இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு மாணவா்கள் பாரதியாா் பற்றிய பாடல்களும், கவிதைகளும் வாசித்தனா். தமிழ்த்துறைத் தலைவா் முனைவா் பெ. சுரேஷ் நிகழ்ச்சிகளைத் தொகுத்தாா். முனைவா் ம. இராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →