சூளகிரி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு 500 விலையில்லா ஆடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏழைப் பயனாாளிகளுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏழைப் பயனாாளிகளுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 125 ஏழை குடும்ப பயனாளிகளுக்கு ரூ. 12.5 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 500 ஆடுகளை இலவசமாக சூளகிரி ஒன்றியக்குழு தலைவா் லாவண்யா ஹேம்நாத் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல உதவி இயக்குநா் இளவரசன், கால்நடை மருத்துவா் ராஜேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை சிவராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாக்கிய ராமச்சந்திரன், செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றிருந்தனா்.