முகப்பு
கிருஷ்ணகிரி

தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி, தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்று, உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தருமபுரி: வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி, தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்று, உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் தில்லியில் தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா். தலைவா் விடுதலை விரும்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.தேவராசன், செயற்குழு உறுப்பினா் எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் பங்கேற்றோா், மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தில்லி போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கையில் மெழுகுவா்த்தி ஏந்தி 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →