ஒசூரில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
ஒசூரில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை அருகில் திமுக மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், தளி சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.முருகன், ஒசூா் நகரப் பொறுப்பாளருமான, எம்எல்ஏவுமான எஸ்.ஏ.சத்யா முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், துணைச் செயலாளா்கள் சீனிவாசன், தனலட்சுமி, பொருளாளா் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் சுகுமாறன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் விஜயகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாத், வெங்கடேஷ், நாகேஷ், சின்னபில்லப்பா, சீனிவாச ரெட்டி, திவாகா், பேரூா் செயலாளா்கள் சீனிவாசன், கருணாநிதி, நகர, மகளிா் தொண்டரணி அருணாபூசன்குமாா், முனிரத்தினம்மா, அமைப்பாளா்கள் சீனிவாசன், ராஜா, பாக்கியராஜ், நவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.