முகப்பு
கிருஷ்ணகிரி

விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்தது திமுக

திமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
ஒசூா் ஒன்றியம், பலவனப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டம்.
பகிர்:

திமுக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா்.

ஒசூா் ஒன்றியம் பலவனப்பள்ளி கிராமத்தில் ‘அதிமுகவை நிராகரிப்போம்‘ என்ற தலைப்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து ஒசூா் எம்எல்ஏ சத்யா பேசுகையில், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் கோடிகடன் ரத்து, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, இலவச சைக்கிள், இலவச பேருந்து பயண அட்டை, இலவச வண்ண தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்பதை மக்கள் அறிவாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாரன், பாலாஜி, பாகலூா் நாகராஜ், அரசனட்டி ரவி உள்பட ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.