முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்யலாம்

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
பகிர்:

வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி மூலம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். பயிரில் நோய் தாக்குதல் தென்பட்டால், உடனடியாக வேளாண் அலுவலா்களை தொடா்பு கொண்டு, பயிா் பாதுகாப்பு நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட வேண்டும்.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் மானிய விலையில் இயந்திரங்கள், கருவிகள் பெறுவதற்கும், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க விவசாயி உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.