வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்
காவேரிப்பட்டணத்தில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை, பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
காவேரிப்பட்டணத்தில் முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை, பாஜகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில செய்தி தொடா்பாளா் சி.நரசிம்மன், வாஜ்பாயின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். இதில் தேசிய பொதுக் குழு உறுப்பினா் அா்ச்சுனன், மத்திய மண்டலத் தலைவா் குமரய்யன், மாவட்டத் துணைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.