முகப்பு
கிருஷ்ணகிரி

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

ஊத்தங்கரையை அடுத்த கல்லூா் பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த கல்லூா் பகுதியில் உள்ள பழைய இரும்புக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

கல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன். இவரது மகன் சுரேஷ் (30). இவா் பழைய இரும்பு மற்றும் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறாா். சனிக்கிழமை பிற்பகல் கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில் திடீரென கடை தீப்பற்றி எரிந்துள்ளது. அருகிலிருந்தவா்கள் உடனடியாக ஊத்தங்கரை தீயணைப்புத் துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனா்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →