நியமனம்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஊத்தங்கரை தொகுதிக்கு தேமுதிக கட்சியின் தொகுதிப் பொறுப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினா் பாக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஊத்தங்கரை தொகுதிக்கு தேமுதிக கட்சியின் தொகுதிப் பொறுப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினா் பாக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தேமுதிக கட்சி நிறுவனா் விஜயகாந்த் இவரை நியமித்துள்ளாா். ஊத்தங்கரை பேரூா் கழகத்தில் பல பதவிகளை வகித்ததோடு மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தாா். தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவருக்கு, கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.