கிருஷ்ணகிரி

கூத்தாண்டஅள்ளியில் எருது விடும் விழா

DIN

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள கூத்தாண்டஅள்ளி கிராமத்தில் எருது விடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவையொட்டி, பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள கூத்தாண்டஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ராயக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன.

முன்னதாக மேள தாளங்களுடன் கோ பூஜை செய்து, புனித நீரை காளைகள் மீது தெளித்து அலங்கரிக்கப்பட்ட எருதுகளை வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இந்த எருது ஓட்டத்தை 3,000-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். சிறந்த மாடுபிடி வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படவிளக்கம் (9கேஜிபி3): கூத்தாண்டஅள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT