கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சா் ஆய்வு

DIN

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை உயா் கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். தொடா்ந்து பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் திட்டப் பணிகளையும் அவா்கள் தொடங்கி வைக்க உள்ளனா்.

இந்த விழாவையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை, மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், மக்களவை முன்னாள் துணைத் தலைவா் மு.தம்பிதுரை, சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.ராஜேந்திரன், முன்னாள் எம்பி கே.அசோக்குமாா், தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் கேசவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT