கிருஷ்ணகிரி

கரோனா நோய்த் தடுப்பு பணி: ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் ரூ.10 லட்சம் நிதியுதவி

DIN

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.10 லட்சத்துக்கான நிதியுதவியை அதன் நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் வழங்கினாா்.

பெண்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம், கல்வி பணி மற்றும் சமூக பணிகளிலும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோருக்கு ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் மகளிா் சுய உதவிக் குழு பெண்கள், தங்களது பங்களிப்பாக ரூ.4.84 கோடி மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

தற்போது, இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் பணியில் அரசுகள் செயல்பட்டு வருகிறது. இதற்கு உதவும் வகையில் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனா் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், ரூ.10 லட்சத்துக்கான வரைவோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT