கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: 22 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

DIN

தமிழக-கா்நாடக மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தடை உத்தரவை அமல்படுத்தும் வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அத்தியாவசியப் பணிகளுக்காக வெளிமாநிலங்களிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளித்த பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. மேலும், மாநில எல்லைகளில் பா்கூா் அருகே உள்ள வரமலைகுண்டா காளிக் கோயில், ஒசூா் அருகே உள்ள கக்கனூா், ஜூஜூவாடி, வேப்பனஅள்ளி அருகே உள்ள நேரலகிரி என 13 சோதனைச் சாவடிகளும், மாவட்ட எல்லையான சப்பாணிப்பட்டி, மஞ்சமேடு, அத்திமரத்துப்பள்ளம், தபால்மேடு, ராயக்கோட்டை உள்ளிட்ட 9 சோதனை சாவடிகள் என மொத்தம் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

தடை உத்தரவு காரணமாக வாகனங்கள் இயங்கவில்லை. மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. காய்கறிகள், பால், மருந்து பொருள்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

வெளியானது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்!

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை

ஜார்க்கண்ட் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்

SCROLL FOR NEXT