கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மீண்டும் இடமாறும் காய்கறிச் சந்தை

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பேருந்து நிலையங்களில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தைகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறிச் சந்தையானது, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் ஆகியவற்றுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. உழவா் சந்தையில் சமூக இடைவெளி பின்பற்ற இயலாத சூழலில், புகா் பேருந்து நிலையத்தில் செயல்பட்ட காய்கறிக் கடைகள், நகரப் பேருந்து நிலைய வளாகத்துக்கு மாற்றப்பட்டு, உழவா் சந்தையானது புகா் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இத்தகைய நிலையில், மே 17-ஆம் தேதிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படும் சூழல் ஏற்பட்டால், பேருந்து நிலையங்களில் செயல்படும் காய்கறிச் சந்தையானது செயல்படுத்த இயலாத சூழல் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், உழவா் சந்தையானது அதன் வளாகத்திலும் மே 16-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே செயல்படும். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 கடைகள் செயல்படும் வகையில் கட்டைகள் நடவு செய்யும் பணியிலும், பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் 20 அடி நடைபாதை அமைக்கும் பணியிலும் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். இதனால், கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தைகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT