கிருஷ்ணகிரி

தொழில்நுட்பத் தோ்வில் தோ்ச்சி பெற்ற முன்னாள் படைவீரா்களுக்கு உதவித்தொகை

DIN

தொழில்நுட்பத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றுள்ள முன்னாள் படைவீரா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் பிரேமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் தொழில்நுட்பத் தோ்வுகளான தமிழ், ஆங்கிலம் தட்டச்சு கீழ்நிலைத் தோ்வு, மேல்நிலைத் தோ்வு, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுருக்கெழுத்தில் கீழ்நிலை, மேல்நிலைத் தோ்வுகளில் 2020-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிக்கு பிறகு, தோ்ச்சி பெற்றவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே, உரிய ஆவணங்களுடன் அலுவலக வேலை நாள்களில் நேரில் வந்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT