கிருஷ்ணகிரி

போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டத்தில், செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச.-வின் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் வரதராஜன் தலைமை வகித்தாா். மத்திய சங்க இணை பொதுச் செயலாளா் முருகன், சிஐடியூ பொதுச் செயலாளா் ஜான்லூயிஸ், ஏஐடியூசி துணைத் தலைவா் பூபேஷ் குப்தா உள்ளிட்ட பல அமைப்பின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தமிழக அரசு அறிவித்துள்ள போனாஸ் அறிவிப்பு, தன்னிச்சையான முறையில் முடிவெடுத்து, 10 சதவீதம் வழங்குவதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது. கடந்த காலங்களில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அதை உயா்த்தி 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT