கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 63,579 போ் பயன்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 63,579 பேருக்கு ரூ.122.03 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள், 18 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 22 மருத்துவமனைகளில் தமிழக அரசு சாா்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் இதுவரையில் 63,579 பயனாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.122.03 கோடி ஆகும். விண்ணப்பித்த அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT