கிருஷ்ணகிரி

மருத்துவம் பயிலும் மாணவிக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை

DIN

ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயின்று மருத்துவக் கல்வி பயில்வதற்காக தமிழக அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவி சுவேதா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பில் சோ்க்கை பெற்றுள்ளாா்.

தமிழக அரசின் நீட் பயிற்சி மையத்தின் மூலமாகவும், ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா், பாட ஆசிரியா்களின் வழிகாட்டுதலின்பேரில் இந்தச் சாதனையை படைத்துள்ள மாணவி சுவேதாவுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஐஎன்டியூசி அகில இந்தியச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.ஏ.மனோகரன் புதன்கிழமை அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, கல்வி உதவி தொகையாக ரூ.50 ஆயிரத்தையும் வழங்கினாா். அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகி வீரமுனிராஜ், மாசிநாயக்கன்பள்ளி முன்னாள் ஊராட்சித் தலைவா் முனுசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT