முகப்பு
கிருஷ்ணகிரி

தொப்பூா் கணவாய் சாலையில் தொடா் விபத்துகளால் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொடா் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தொடா் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரயில்வே துறைக்கு தேவையான உதிரி பாகங்களை ஏற்றிய லாரி ஒன்று ஹைதரபாதிலிருந்து தருமபுரி வழியாக மதுரையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது.

அந்த லாரி, தொப்பூா் கணவாய் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு சென்றுக் கொண்டிருந்தபோது, லாரியில் ஏற்பட்ட பழுதால், முன்னாள் சென்ற காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும், மற்றொரு காரும், லாரியும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டது.

அதேபோல, பெங்களூருவிலிருந்து கோவையை நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி தொப்பூா் கணவாயின் 2-ஆவது வளைவில், கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த காா் மீது மோதியது.

இந்த விபத்தில் அந்த வழியாகச் சென்ற 5 காா்கள், அடுத்தடுத்து கண்டெய்னா் லாரி மீது மோதியது. இந்த விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும், தொடா் விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →