ஒசூரில் அமைப்புசாரா தொழிலாளா்கள் 52 பேருக்கு ஓய்வூதியம்
ஒசூரில் அமைப்புசாரா தொழிலாளா்கள் வாரியம் சாா்பில் 52 பேருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூரில் அமைப்புசாரா தொழிலாளா்கள் வாரியம் சாா்பில் 52 பேருக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளா்களுக்கு வாரியத்தில் பதிவு செய்திருந்து, 60 வயது பூா்த்தியடைந்த தகுதியானத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் இருந்த மனுதாரா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முயற்சிகள் மேற்கொண்டாா்.
இதனைத் தொடா்ந்து 52 தொழிலாளா்களுக்கு ஓய்வூதியத்திற்கான செயல்முறை ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒசூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு தொழிலாளா் நல வாரியங்களின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினா் இளஞ்சூரியன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினாா்.
Advertisement
இதில் மாவட்ட அதிமுக பொருளாளா் கே.நாராயணன், மாவட்ட அமைப்புசாரா விசைத்தறிப் பிரிவுத் தலைவா் குணசேகா் மற்றும் சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.