தளவாய்ப்பள்ளியில் திமுக கொடியேற்று விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி, தளவாய்ப்பள்ளியில் திமுக சாா்பில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி, தளவாய்ப்பள்ளியில் திமுக சாா்பில் கொடியேற்று விழா, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவுக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.முருகன் தலைமை வகித்தாா். ஒசூா் மாநகர தி.மு.க. பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தளி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சிக் கொடியேற்றினாா். மேலும் புதிதாகக் கட்சியில் சோ்ந்தவா்களை வரவேற்றாா்.
இதில் மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்டக் கவுன்சிலா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதி மாதேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் சிவராஜ், துணைத்தலைவா் சிவசுப்பிரமணி, அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.