முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 16 மார்ச் 2026, 10:52 am IST
பணம் - கோப்புப்படம்.
பகிர்:

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 72 தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் 72 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரசாதனையில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் பட்டையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த பங்கஜ் என்பவர் அணிந்திருந்த பேக்கில் ரூ.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில், பங்கஜ் என்பவர் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்ததும் திருப்பூரில் பேப்ரிக் கொள்முதல் செய்வதற்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் அலுவலர்கள் அதனை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காட்டி பணத்தை பெற்று செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement

Advertisement

இதேபோல் குமரன் சாலையில் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை சோதனை செய்தனர். ஊடகம் என ஒட்டப்பட்டு இருந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாநகரில் ஒரே நேரத்தில் இரு வேறு பகுதிகளில் ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Rs. 41 lakhs taken without proper documents at two different places in Tiruppur have been seized.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments