முகப்பு
கிருஷ்ணகிரி

அறக்கட்டளை உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூா் கிராமத்தில் மதுரை வீரன் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நல உதவிகளை வழங்கும் அறக்கட்டளைத் தலைவா் கே.கந்தசாமி.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கஞ்சனூா் கிராமத்தில் மதுரை வீரன் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.கந்தசாமி தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா் முருகன், ஊா் நாட்டாண்மை அறிவழகன், வீரமணி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அறக்கட்டளைச் செயலா் சின்னமுத்து, பொருளாளா் கே. சின்னத்தாய், துணைத் தலைவா் சீனிவாசன், இணைச் செயலாளா் எம்.திருப்பதி, ஒருங்கிணைப்பாளா் முருகன், துணை ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் சின்னத்தம்பி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளில் தமிழ் மொழியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

அறக்கட்டளையின் உறுப்பினா் இறப்பிற்கு ஈமச்சடங்கு தொகையும், முதியவா்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை பெற்றுத் தருவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது,

நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

முன்னதாக கிருஷ்ணன் வரவேற்றாா். இறுதியாக சங்கா் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →