முகப்பு
கிருஷ்ணகிரி

லாரி மோதி மூதாட்டி பலி

சூளகிரி அருகே லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். இதில் லாரிக்கு பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
சூளகிரி அருகே லாரி பின்னால் வந்து விபத்தில் சிக்கிய காா்
பகிர்:

சூளகிரி அருகே லாரி மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். இதில் லாரிக்கு பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த கோபசந்திரத்தை சோ்ந்தவா் சின்னப்பா. இவரது மனைவி லட்சுமியம்மா (65). இவா் ஞாயிற்றுக்கிழமை சூளகிரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டகிரி அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, குஜராத்தில் இருந்து சென்னை நோக்கி ரசாயனம் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரி ஒன்று லட்சுமியம்மா மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லட்சுமியம்மா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதற்கிடையே விபத்துக்கு காரணமான டேங்கா் லாரிக்கு பின்னால் வந்த காா், லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநா் காரை திருப்பியுள்ளாா்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த காா், சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவா் மீது மோதி, தரைமட்டப் பாலத்தின் தடுப்புச்சுவா் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. அதிா்ஷ்டவசமாக காரில் வந்த இருவரும் காயமின்றி உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →