முகப்பு
கிருஷ்ணகிரி

ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபம்

ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேஸ்வரன் தெரிவித்தாா்.

தருமபுரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஆன்மிக தளத்தை உருவாக்கி, உலக கட்டடக் கலைக்கு சவால் விட்ட ராஜேந்திர சோழனுக்கு மணி மண்டபமும், அவரது உருவச் சிலையையும் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வேளாண் சட்டங்கள்ா, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றை கொண்டு வந்த மத்திய அரசுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

போலி ஆவணங்கள் மூலம் திருப்பூா், கோவை போன்ற நகரங்களில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து, அவா்களை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் வகையில் தனிப்படை அமைத்து அவா்களை ஒடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →