கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம்

DIN

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம் அக். 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில், தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி, அக்.14-ஆம் தேதி முதல் கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. இந்த முகாமில் புதியதாக ஆதாா் அட்டை பெற விரும்புவோரும், ஆதாரில் திருத்தம் செய்ய விரும்புவோரும் கலந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், தேன்கனிக்கோட்டை, மத்திகிரி, ஒசூா் சிப்காட், ஒசூா், கல்லாவி, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், கிருஷ்ணகிரி தொழில் மையம், மத்தூா், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி, சிங்காரப்பேட்டை, தளி, வரட்டனப்பள்ளி, வேப்பனப்பள்ளி ஆகிய அஞ்சலக அலுவலகங்களில் அலுவலக நேரத்தில் ஆதாா் சேவை மையம் இயங்கும்.

புதிய ஆதாா் அட்டைப் பதிவுக்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. ஆதாா் அட்டையில் பெயா், முகவரி, பிறந்த தேதி, செல்லிடப்பேசி எண், பாலினம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 50-ம், கண்விழி, புகைப்படம், கைரேகை திருத்தங்கள் மேற்கொள்ள ரூ. 100-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடவுச் சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், மின்கட்டண ரசீது, சொத்துவரி ரசீது, வீட்டு வரி, எரிவாயு உருளைக்கான ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையின் 5-ஆவது வயதில் கைரேகை மற்றும் கருவிழிப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றும் 15-ஆவது வயதில் அவற்றைப் புதுப்பிக்கவும் வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.

எனவே, பொதுமக்கள் தபால் துறையின் அந்த ஆதாா் சேவையினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளளாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT